2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். சனி கும்ப ராசியில் நுழைவதால் தனுசு ராசியினர் ஏழரை சனியிலிருந்து விடுபடுவார்கள். அதே சமயம் மீன ராசியினருக்கு ஏழரை சனி தொடங்க உள்ளது.
மேஷம் சனி பெயர்ச்சி பலன்கள் 2023
நல்ல எண்ணமும் நற் சிந்தனையும் கொண்ட மேஷ ராசி, லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நிகழப்போகும் சனி பெயர்ச்சி எண்ணற்ற நன்மைகளைத் தரப்போகிறது. மேஷ ராசிக்காரர்கள் இன்னும் இரண்டரை ஆண்டு காலத்திற்கு சனிபகவானின் பார்வையில் இருக்கப்போகிறார்கள்.
கிரகநிலை
இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
மேஷ ராசி அன்பர்களே! லாபத்தைக் குறிக்கும் வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். எனவே சனி உங்களுக்கு லாபங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவார் என்றாலும் அவர் உங்களை கடினமாக உழைக்கச் செய்வார். உங்கள் நோக்கம் என்ன, அதை எவ்வாறு அடைய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், சில வாய்ப்புகள் உங்களுக்கு எளிதாக வரும், அனால் அவற்றை அடைய கடின உழைப்பும் பொறுமையும் அவசியம். அவற்றை முழுமையாக அடைய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
நிதி நிலை முன்னேற்றம்
இந்த ஆண்டு, சனி பகவான் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் நிதி அம்சங்கள் நன்றாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்து, உங்கள் முதலீடுகளுக்கு தெளிவான திட்டங்களை வைத்திருந்தால், நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் வருமானம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
அதோடு எந்த ஒரு வேலையிலும் நீங்கள் திறம்பட செயலாற்றுவீர்கள் என்றாலும் சில தடைகளை நீங்கள் தாண்டி தான் வெற்றி கிடைக்கக்கூடிய நிலை இருக்கும் என்பதால் மனம் தளராமல் முயன்றால் வெற்றியை அடையலாம்.
திருமண வாழ்க்கை
திருமணம் செய்ய விரும்புபவர்கள் தவிர்க்க முடியாத சில தாமதங்கள் மற்றும் தடைகள் இருக்கும் என்றாலும் நிச்சயம் திருமணம் நடக்கும். பொறுமை முக்கியம்.
திருமணம் ஆனவர்கள் வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் வேண்டுமானால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்ளவேண்டும்.
மாணவர்கள்
மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கவனம் செலுத்தி படிக்க வேண்டும். விடா முயற்சி உங்களுக்கு வெற்றியை அளிக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் கல்லூரி அல்லது துறையில் சேரும் வாய்ப்பு கிட்டும்.
வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். போட்டித் தேர்வு எழுத நினைக்கும் மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியம்
இந்தக் காலக்கட்டத்தில் உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் அதனை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வயதானவர்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆரோக்கியம் தரும் யோகா, தியானம் போன்றவற்றை நல்ல பயிற்சியாளர்களின் உதவியோடு செய்வது நல்லது.
மேஷம் சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்
கார்த்திகை நட்சத்திரம்
எதிரிகளிடம், நடிப்பவர்களிடம் கவனமாக இருக்கவும்.
அஸ்வினி நட்சத்திரம்
பதவி உயர்வு கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும்
பரணி நட்சத்திரம்
சொத்துக்கள் வாங்குதல், சுப காரியங்கள் நடக்கும்.
பரிகாரங்கள்
- அன்றாட எந்த ஒரு வேலையையும் தொடங்குவதற்கு முன், தினமும் விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.
- மாதம் ஒரு முறை சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யவும்.
- சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள். உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப முதியோர் இல்லங்களை ஆதரிக்கவும்.