நவராத்திரி பூஜை செய்யும் முறை

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.

‘ஒன்பது இரவுகள்’ என்று பொருள்படும் நவராத்திரி, துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள். இருப்பினும், பத்தாவது நாள் மிக முக்கியமான நாளாகும். இது ‘வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது.இதனை விஜயதாசமி என்று அழைக்கப்படுகிறது.

ஒன்பது படிகள்

நவராத்திரி கொலு வைப்பவர்கள் ஒன்பது படிகள் கொண்ட கொலு பீடத்தை அமைத்து முதல் படியில் ஓரறிவு கொண்ட மரம், செடி போன்ற பொம்மைகளையும், இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, கடற்சங்கு போன்றவற்றின் பொம்மைகளையும், மூன்றாம் படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, ஊர்வன போன்றவற்றின் பொம்மைகளையும், நான்காம் படியில் வண்டு, நண்டு போன்றவற்றின் பொம்மைகளையும், ஐந்தாம் படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகளின் பொம்மைகளையும், ஆறாம் படியில் உயர்ந்த மனிதர்களின் பொம்மைகளையும், ஏழாம் படியில் சித்தர்கள், மகான்கள் போன்றவர்களின் பொம்மைகளையும், எட்டாம் படியில் தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள் போன்றவர்களின் பொம்மைகளையும், ஒன்பதாம் படியில் பிரம்ம, விஷ்ணு, சிவன் போன்ற கடவுளர்களின் உருவ பொம்மைகளை வைக்க வேண்டும்.

பூஜையை நடத்துபவர் உபவாசம் இருந்து, தரையில் மட்டுமே படுக்கவேண்டும். நவராத்திரி ஒன்பது நாட்களில் ஒன்பது விதமான மலர்கள், அன்மை என்று 9 என்ற எண்ணிக்கையில் பூஜை செய்வது மிகவும் சிறப்பாகும்.

ஒன்பது நாள்களும் போட வேண்டிய கோலங்கள்

  • முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
  • இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
  • மூன்றாம் நாள் – முத்து மலர்
  • நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
  • ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
  • ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
  • ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)
  • எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)
  • ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)

ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்

  • முதல்நாள் – தோடி
  • இரண்டாம் நாள் – கல்யாணி
  • மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை
  • நான்காம் நாள் – பைரவி
  • ஐந்தாம் நாள் – பந்துவராளி
  • ஆறாம் நாள் – நீலாம்பரி
  • ஏழாம் நாள் – பிலஹரி
  • எட்டாம் நாள் – புன்னாகவராளி
  • ஒன்பதாம் நாள் – வஸந்தா

ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்

  • முதல் நாள் – மல்லிகை
  • இரண்டாம் நாள் – முல்லை
  • மூன்றாம் நாள் – செண்பகம், மரு
  • நான்காம் நாள் – ஜாதிமல்லி
  • ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
  • ஆறாம் நாள் – செம்பருத்தி
  • ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
  • எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
  • ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து

ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்

  • முதல் நாள் – வாழைப்பழம்
  • இரண்டாம் நாள் – மாம்பழம்
  • மூன்றாம் நாள் – பலாப்பழம்
  • நான்காம் நாள் – கொய்யாப்பழம்
  • ஐந்தாம் நாள் – மாதுளை
  • ஆறாம் நாள் – ஆரஞ்சு
  • ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
  • எட்டாம் நாள் – திராட்சை
  • ஒன்பதாம் நாள் – நாவல் பழம்

ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்

  • முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
  • இரண்டாம் நாள் – புளியோதரை
  • மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
  • நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
  • ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
  • ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
  • ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
  • எட்டாம் நாள் – பாயஸôன்னம் (பால் சாதம்)
  • ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.

இதையும் படிக்கலாம் : நவராத்திரி உருவான கதையும் கொலுபடிகளின் தத்துவமும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *