பக்கரை விசித்ரமணி (விநாயகர்) – திருப்புகழ் 2

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்ட நடை
பக்ஷிஎனும் உக்ரதுர – கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை – வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரக்ஷைதரு
சிற்றடியும் முற்றியப்ப – னிருதோளும்

செய்ப் பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பென எனக்கருள்கை – மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடன் நெய்
எட்பொரி அ வற்றுவரை – இளநீர்வண்

டெச்சில் ‘பய றப்பவகை பச்சரிசி பிட்டுவௌ
ரிப்பழம் இ டிப்பல்வகை – தனிமூலம்

மிக்க அடி சிற்கடலை பக்ஷணம்எ னக்கொளொரு
விக்கிநச மர்த்தன் எனும் – அருளாழி!

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : உம்பர் தரு (விநாயகர்) – திருப்புகழ் 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *