தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

பழங்களிலேயே பழமையான பழம் மாதுளம் பழம் தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன.

நீண்ட நாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்து விடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும் கொண்டது மாதுளம் பழம்.

மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாக அழித்து விடுகிறது.

அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம் பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

மாதுளம் பழத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஃபைபர் போலேட் , விட்டமின் சி , விட்டமின் கே, பொட்டாசியம் முதலிய சத்துக்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு இந்தப் பழங்கள் ஏற்றது.

மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

மாதுளை பழங்கள் தொடர்ந்து உட்கொள்வதால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. அதனால் பெண்கள் தங்கள் உணவில் மாதுளை பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

மாதுளம் பழத்தை ஜூஸ் பிழிந்து அதனுடன் கற்கண்டுகளை சேர்த்து தினந்தோறும் காலையில் அருந்தும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும்.

மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.

மாதுளம் பழத்தில் கொழுப்பை கரைக்கும் சக்தி அதிகம் உண்டு. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தினந்தோறும் காலையில் மாதுளம் பழத்தை சாப்பிடுவது நல்லது.

இப்பழம் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் கொழுப்பு படிவதை தடுத்து இதய பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.

எந்த ஒரு மனிதனும் ஆரோக்கியமாக இருக்க அவனது வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் ஏற்படும் அல்சர், வாயு கோளாறுகள், குடற்புழுக்கள் போன்ற அனைத்திற்கும் மாதுளம் பழம் சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

மாதுளையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அதனால் செரிமானம் சிறப்பான வகையில் ஏற்படுகிறது. ஆக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பே கிடையாது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் தசைப் பிடிப்புகள் ஏற்படும். இந்த பிரச்சனையைச் சரிசெய்து கொள்ள மாதுளை சரியான தீர்வாக உள்ளது.

மேலும் இந்தப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகளவில் காணப்படுகின்றது. இந்த சத்தானது உடல் தசைகளில் உள்ள திரவங்களைச் சமன்படுத்துகின்றது. அதனால் தசைப் பிடிப்பு பாதிப்பு இல்லாமல் போகும்.

மாதுளம் பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும்.

இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகி வந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.

சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த மாதுளம் பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஆய்வாளார்கள்.

இத்தனை சத்துக்கள் நிறைந்த மாதுளம்பழத்தை தினமும் ஒரு கைப்பிடி அளவாவது சாப்பிட்டு நம் உடல் நலத்தை காத்துக்கொள்வோம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *