மகா சிவராத்திரியில் சொல்ல வேண்டிய சிவமந்திரம்

சிவனுக்கு உகந்த மிகச்சிறப்பான பண்டிகையாக மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை முன்னிட்டு விரதம் இருப்பவர்கள் கோயில்களுக்குச் சென்று சிவபுராணம், சிவதாண்டவம் படித்து வழிபாடு செய்யலாம். தேவாரம், திருவாசகம் படித்து சிவபெருமானின் அருள் பெறலாம்.

‘ஓம் நமசிவாய’ என்பது ஐந்தெழுத்துக்களைக் கொண்ட சிவ மந்திரம், அனைவரும் எளிதில் ஜபிக்க முடியும். இதன் பொருள் நான் சிவபெருமானை வணங்குகிறேன். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிப்பதன் மூலம் நமது உடலும் மனமும் தெய்வீகமாகும். இதன் மூலம் சிவபெருமானின் அருள் கிடைக்கும்.

பாவம் நீக்கும் தியான மந்திரம்

shiva mantra

நாம் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க இறைவனிடம் வேண்டுவதே இந்த மந்திரத்தின் பொருள்.

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

மரண பயம் போக்கும் மந்திரம்

சிவபெருமான் தீமையை அழிப்பவர் என்பதால், மரண பயத்தை நீக்குவதும் அவரது கடமையாகும். எனவே மகா மிருத்யுஞ்சய் மந்திரத்தை உச்சரிப்பதால் மரண பயம் நீங்கும்.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

ருத்ர மந்திரம்

maha shivaratri

“ஓம் நமோ பகவதே ருத்ராய” என்ற ருத்ர மந்திரம் ருத்ரனை போற்றும் மந்திரமாகும்.

சிவபெருமானின் அருள் பெற இந்த மந்திரத்தை உச்சரிக்கவும். இந்த மந்திரங்கள் துரதிர்ஷ்டத்திலிருந்து விடுபட உதவும். இந்த மந்திரத்தை மஹாசிவராத்திரி மற்றும் பிரதோஷம் நாட்களில் சிவன் கோவில்களிலும், நம் வீடுகளில் உள்ள பூஜை அறையிலும் உச்சரிக்கலாம்.

சிவனருள் தரும் காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். சிவகாயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

“ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்”

இந்த சிவ காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரிப்பதால் மன அமைதியும், இறைவன் அருளைப் பெறலாம்.

பாவம் நீக்கும் சிவ மந்திரம்

maha shivarathiri

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

சிவராத்திரி அல்லது பிரதோஷ நாளில் சிவன் கோவிலில் பிரார்த்தனை செய்யத் தொடங்கி, ஒவ்வொரு நாளும் அதைப் பின்பற்றுங்கள். இதைச் செய்வதன் மூலம், பாவச் செயல்கள் நீங்கி, மகிழ்ச்சியும் அமைதியும் உங்கள் வாழ்வில் சேரும்.

இதையும் படிக்கலாம் : ஐந்து வகையான சிவராத்திரி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *