தரிக்குங்கலை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 64

தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
தவிக்குங்கொடி – மதனேவிற்

றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
தமிழ்த்தென்றலி – னுடனேநின்

றெரிக்கும்பிறை யெனப்புண்படு
மெனப்புன்கவி – சிலபாடி

இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
யுரைத்துய்ந்திட – அறியாரே

அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
மனுக்குந்தெரி – வரிதான

அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
மரற்கும்புரி – தவபாரக்

கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
வரிக்குங்குரு – பரவாழ்வே

கிளைக்குந்திற லரக்கன்கிளை
கெடக்கன்றிய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : துன்பங்கொண்டு அங்கம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 65

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *