வரம் அருளும் திருப்புகழ்..!

சிறுவாபுரியில் வீற்றிருந்து வரங்களை அருளும் பெருமானே, எனக்கு வேண்டிய வரங்களைத் தருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்.

பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெறிந்து

பிணிக ளான துயர்உ ழன்று- தடுமாறிப்

பெருகு தீயவினையி னொந்து கதிகள்தோறு மலைபொருந்தி

பிடிப டாத ஜனன நம்பி- அழியாதே

நறைவி ழா த மலர்மு கணந்த அரிய மோன வழிதிறந்த

நளின பாதம் என சிந்தை- அகலாதே

நரர்சு ராதி பரும்வ ணங்கும் இனிய சேவைதனை விரும்பி

நல ன்தாக அடியன் என்று- பெறவேனோ

பொறிவ ழாத முனிவர் தங்கள் நெறிவழாத பிலனுழன்று

பொருநி சாச ரனைநி னைந்து- வினைநாடிப்

பொருவி லாமல் அருள்புரிந்து மயிலின் ஏறி நொடியில் வந்து

புளக மேவ தமிழ் புனைந்த- முருகோனே

சிறுவ ராகி இருவர் அந்த கரிபதாதிகொடு

பொருஞ் சொல்

சிலைஇ ராமன் உடன்எ திர்ந்து- சமராடிச்

செயம தான நகர்அ மர்ந்த அளகை போல வளமி குந்த

சிறுவை மேவி வரமி குந்த – பெருமாளே.

சீதாபிராட்டியை கொடுஞ் சொல்லால் கானகத்துக்கு அனுப்பிய, வில்லேந்திய ராமனை, சிறுவரான லவ- குசலவர் இருவரும், யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை இவற்றுடன் வந்த போது, எதிர்த்து போரிட்டு வெற்றி கொண்ட குபேர பட்டணமான அளகாபுரி போல எல்லா வளங்களும் மிகுந்துள்ள இச்சிறுவாபுரியில் வீற்றிருந்து வரங்களை அருளும் முருக பெருமானே, எனக்கு வேண்டிய வரங்களை அருள்வாய் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாம் : முருகனின் 16 வகை கோலங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *