விநாயகருக்கு உகந்த விரதங்கள்

விநாயகர் என்ற சொல்லுக்கு ‘வி’ என்றால் இல்லாமை. ‘நாயகன்’ என்பவர் தலைவன். விநாயகர் என்றால் மேலான தலைவர், தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்று பொருளாகும்.

சதுர்த்தி விரதம்

ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் துவங்கி அடுத்த ஆண்டு புரட்டாசி சதுர்த்தி வரை ஒரு ஆண்டிற்கு தொடர்ந்து அனுஷ்டிப்பது சதுர்த்தி விரதம். சதுர்த்தி விரதம் இருந்தால் செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

வெள்ளிக்கிழமை விரதம்

வைகாசி வளர்பிறை வெள்ளிக்கிழமை துவங்கி, தொடர்ந்து 52 வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் விரதம். இந்த வெள்ளிக்கிழமை விரதத்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

சங்கடஹர சதுர்த்தி விரதம்

மாசி மாத தேய்பிறை சதுர்த்தி துவங்கி, ஒரு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாத தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருப்பது. இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் எப்படிப்பட்ட துன்பமும் விலகிவிடும்.

குமார சஷ்டி விரதம்

கார்த்திகை தேய்பிறை பிரதமை திதி முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் அனுஷ்டிக்கும் இந்த விரதத்தால் தைரியம் அதிகரிக்கும். இந்த விரதத்தை பிள்ளையார் நோன்பு என்று சொல்லுவாங்க.

செவ்வாய் விரதம்

தை அல்லது ஆடி முதல் செவ்வாய் தொடங்கி, தொடர்ந்து 52 வாரங்கள் அனுஷ்டிக்கும் விரதம் செவ்வாய் விரதம்.  இந்த செவ்வாய் விரதத்தால் செல்வ வளம் பெருகும். இந்த விரதம் மேற்கொள்ளும் பெண்களுக்கு விரதம் இருக்க முடியாத நாட்கள் இருக்குமானால் பின்வரும் வாரங்களில் கூட்டிக் கொள்ளலாம்.

தை வெள்ளி விரதம்

தை மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் மட்டும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம். தை வெள்ளி விரதம் இருந்தால் செல்வ விருத்தியும், கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாம் : விநாயகர் அகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *