வளையல்களைப் பற்றி கனவு கண்டால் என்ன பலன்கள்?

கனவுகள் என்பது எல்லா மக்களுக்கும் இயல்பாக வரும் ஒன்று. ஒவ்வொருவருக்கும் பல்வேறு கனவுகள் பலவிதமான வகையில் வரும். ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், நாம் காணும் கனவுகள் அனைத்தும் எதிர்காலத்தில் நமக்கு அல்லது நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு ஏதாவது நடக்கப் போகிறது என்று அர்த்தம். இதன் பொருள் ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு பலனை கொடுக்கிறது.

நம்மில் பலருக்கு கனவுகளின் அர்த்தம் தெரியாமல் பாட்டியிடம் கனவின் அர்த்தம் பற்றி கேட்போம். அதேபோல் கண்ணாடி வளையல் கனவில் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் படிக்கலாம்.

கனவில் கண்ணாடி வளையலைப் பார்ப்பது வீட்டில் சுப காரியங்களுக்கான உங்கள் முயற்சிகள் கைக்கூடும் என்பதைக் குறிக்கிறது. கூடுதலாக, நமக்கு எதிர்மறையான எண்ணங்கள் வரவிருப்பதையும், மனதில் உள்ள அனைத்தையும் பிறரிடம் வெளிப்படையாக சொல்ல கூச்சப்பட்டு கொண்டு கூறாமல் இருப்பதை இது குறிக்கிறது. இது மிகப்பெரிய ஆசைகள் மற்றும் இலக்குகளை நிறைவேற்றுவதையும் குறிக்கிறது.

உங்களிடம் பல வளையல்கள் இருப்பதாக கனவு கண்டால், துரதிர்ஷ்டத்தை சந்திப்பீர்கள், மற்றவர்களின் மரியாதையை இழப்பீர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து விரோதப் போக்கைப் பெறுவீர்கள். பேசும் வார்த்தையில் கவனமா இருக்க வேண்டும்.
இதற்கு பரிகாரமாக அம்பாருக்கு வளையல் அணிவித்து வழிபடலாம்.

பச்சை கண்ணாடி வளையலைக் கனவு கண்டால், வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள், இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும், அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்ளவேண்டும்.

சிவப்பு வளையலைக் கனவு கண்டால், புதிய சுதந்திரத்தைப் பெறுவீர்கள், மேலும் மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு வரும்.

இதையும் படிக்கலாம் : இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *