எந்த நோய்க்கு என்ன பழம் சாப்பிட்டால்..!!

foods-that-fight-disease

உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் தன்மை காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. இருந்தாலும் எந்த நோய்க்கு எந்த காய்கறி, பழங்களை சாப்பிடலாம் என தெரிந்து சாப்பிட்டால் இன்னும் அதிகமான பலன்களை பெறலாம்.

உடற்பருமன்

அதிகளவில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினால் உடற்பருமன் ஏற்படுகிறது. உடற்பருமனால் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகிறது.

முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய், பச்சைக் காய்கறிகள், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், வெஜ் க்ளியர் சூப் ஆகியவற்றினை நம் உணவில் அதிகமாக சேர்த்து கொள்வதன் மூலம் உடற்பருமனை குறைக்கலாம்.

நீரிழிவு நோய்

பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயினால் தான். உண்மையில் மெல்ல கொல்லும் ஆபத்தினை உடையது நீரிழிவு நோய் தான்.

தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், கத்திரிப் பிஞ்சு, காலிஃப்ளவர், பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகிய காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.

மேலும் சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி போன்ற பழங்களையும் உணவில் சேர்த்து கொள்வதால் நீரிழிவு நோயினை கட்டுபடுத்தலாம்.

குடல் புண்

அதிகளவில் துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட எண்ணெயில் பொரித்த உணவுகளையும் சாப்பிடும் போது அவை சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும். இதனால் அஜீரணக் கோளாறு மற்றும் குடல் புண் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

குடல் புண் சரியாவதற்கு

மணத்தக்காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய்க் கோளாறுகள்

உடற்பருமன் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளால் முறையற்ற மாதவிடாய் பிரச்சனை உண்டாகிறது. இது கருத்தரித்தல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

வாழைப்பூ, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், திராட்சை, மாதுளை, தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை உணவில் அதிக சேர்த்து கொள்ளலாம்.

ஆஸ்துமா

ஆஸ்துமா போன்ற மூச்சு தொடர்பான பிரச்சனைகளுக்கு கேரட், முருங்கை, புதினா, கொத்தமல்லி, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, திராட்சை, பேரீச்சை, தூதுவளை ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

ரத்தசோகை

இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்த சோகை பிரச்சனை உண்டாகிறது. இதனால் மாதவிடாய் பிரச்சனை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.

பூசணி, பீட்ரூட், அவரை, புடலங்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், காலிஃப்ளவர், நெல்லிக்காய், கீரை வகைகள், பேரீச்சம்பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை தினசரி உணவில் நாம் சேர்த்து கொள்ளும் போது சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மலச்சிக்கல்

பாலக் கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா ஆகிய பழங்களில் ஏதேனும் ஒன்றினை தினமும் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

சிறுநீரகக் கல்

சரியாக நீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றினால் சிறுநீரகக் கல் உண்டாகிறது.

இயற்கையாக இந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள் ஆகியவற்றினை நம் உணவில் சேர்த்து கொண்டால் போதுமானதாகும்.

மூலம்

மலச்சிக்கல், அடிக்கடி துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் செரிமான பிரச்சனை போன்றவற்றில் மூலம் ஏற்படுகிறது.

பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம், நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிடும் போது மூலம் சரியாகும்.

நரம்பு கோளாறுகள்

கொத்தமல்லி, வல்லாரை, முருங்கைக்காய், நெல்லி, மாதுளை, கேரட், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், மா, பலா போன்ற காய்கறிகள், பழங்களை அதிகமாக சேர்த்து கொண்டால் நரம்பு கோளாறு சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

இதையும் படிக்கலாம் : உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *