ஞாயிறு ஏன் முதல் நாள்?

ஞாயிறு என்ற சொல்லில் ஞா என்றால் நடுவில் தொங்கிகொண்டு என்பது பொருள். யிறு என்றால் இறுகப் பற்றிக் கொண்டுள்ள கிரகங்கள் என்று பொருள். எனவே நடு நாயகமாக விளங்கும் சூரியன் மற்றைய கிரகங்களைப் பற்றிக் கொண்டுள்ளது. சூரியனின் இயக்கத்தில் தான் உலகம் இயங்குகிறது என்பதை உணர்த்தும் வகையில் இந்த பெயர் அமைந்துள்ளது.

சூரிய பகவான், ஏழு குதிரைகள் பூட்டிய ஒன்றைச் சக்கரத் தேரில் பயணிக்கும் உருவமுடையவனாக பட்டினப்பாலை நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளான். ஏழு குதிரைகள் ஏழு நாட்களைக் குறிக்கும். இந்த நாட்களை இயக்குபவன் சூரியன்.

suriya bhagavan

உலகின் இயக்கம் சூரியனின் இயக்கத்துடன் நிகழ்கிறது.

காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்கள் அன்றாட கடமைகளை செய்யுங்கள்.

மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் சூரிய உதயத்தில் தான் விழித்துக் கொள்கின்றன.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய சூரிய ஒளியைப் பயன்படுத்துகின்றன. பறவைகள் இரை தேடி செல்கின்றன.

மனிதர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.

ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது.

எனவே, வாரத்தின் முதல் நாளை சூரிய நாளாகக் கடைப்பிடிக்கின்றனர்.

ஐம்பெரும் தமிழ் நூல்களில் முதன்மையான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்து ஞாயிறு துதியுடன் தொடங்குகிறது.

மற்ற இயற்கை வழிபாட்டு முறைகளான சந்திரன் மற்றும் மழை கடவுள் போன்றவை சூரியனுக்குப் பிறகு தோன்றின.

 எந்தெந்த ராசிக்கு எந்த கடவுளை வணங்கினால் அதிஷ்டம் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *