கழுதைப்புலியின் சுவாரஸ்யமான பண்புகள்..!

கழுதைப்புலியின் உண்மையான குணாதிசயங்களைக் பற்றி தெரிந்து கொள்வோம். கழுதைப்புலி இரை தேடி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலையும். இது ஓர் அனைத்துண்ணி விலங்காகும்.

இந்த விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது. கழுதைப்புலி ஒரே இடத்தில் வசிக்காதவை; ஒரு நீர் நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலையைத் தேடி அலைந்து திரிந்துகொண்டிருக்கும்.

கழுதைப்புலியின் உடலின் மேல் பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். உடல் முழுவதும் 5 முதல் 9 தடித்த கருப்பு கோடுகள் உள்ளன. அதன் நெற்றி, தாடி, தோள்கள் மற்றும் காதுகள் அனைத்தும் கருப்பு.

இந்த விலங்கு அச்சத்திலோ அல்லது சினத்திலோ அல்லது மற்ற விலங்குகளை பயமுறுத்தும்போது, ​​அதன் உடல் முடியை செங்குத்தாக உயர்த்துகிறது, மேலும் அதன் உடல் இயல்பை விட 30 முதல் 40 சதவீதம் பெரியதாக தோன்றும். இந்த நடத்தை மற்ற கழுதைப்புலிகளை எதிர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டிருப்பினும் பெரும்பாலும் பிற விலங்குகள் விட்டுச்செல்லும் எச்சங்களையே தின்னும், மேலும் சிறு விலங்குகள், பழங்கள் மற்றும் பூச்சிகளையும் தின்னும்.

கழுதைப்புலி பெயர்கள்

கழுதைப்புலிக்கு கடுவாய், என்புதின்றி, கொடுவாய், தரக்கு, புலிக்குடத்தி, கழுதைக்குடத்தி, கழுதைக்குறத்தி, வங்கு என்ற பிற பெயர்களும் உண்டு.

இனப்பெருக்கம்

கழுதைப்புலி வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். பெண் கழுதைப்புலிகள் 2-3 வருடங்களில் பருவமடைந்து இனப்பெருக்கத்திற்கு தயராகும். இதன் பேறுகாலம் 88 முதல் 92 நாட்களாகும்.

கழுதைப்புலி குட்டிகளை பெரும்பாலும் குகைகளில் ஈன்றெடுக்கும். பொதுவாக 1 முதல் 5 குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்குப் பிறகு மாமிச உணவை உட்கொள்ள ஆரம்பிக்கும்.

கழுதைப்புலி 4 வகைகள்

ஒரு வகை கழுதைப்புலி இந்தியாவில் அதுவும் நம் தமிழ்நாட்டில் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் வரிகள் கொண்ட கழுதைப்புலிகள் உள்ளன.

  • முதல் வகை புள்ளிகள் கொண்ட கழுதைப்புலி;
  • இரண்டாவது வரிகள் கொண்ட கழுதைப்புலி;
  • மூன்றாவது வகை கிரே கழுதைப்புலி;
  • நான்காவது வகை ஓநாய் மாதிரியான தோற்றத்தைக் கொண்ட கழுதைப்புலி;

கழுதைப்புலியின் சுவாரஸ்யமான பண்புகள்

  • கழுதைப்புலிகள் பெரும்பாலும் இரவில் இரை தேடும். சிங்கங்கள், புலிகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற விலங்குகள் வேட்டையாடி சாப்பிட்டு மீதமுள்ளதை இந்த கழுதைப்புலி உட்கொள்ளும்.
  • மற்ற விலங்குகளை விட கழுதைப்புலிகள் ஒன்றுக்கு ஒன்று மேன்மையைக் கொண்டுள்ளன. அதாவது இந்த கழுதைப்புலிகளில் பெண்கள் தான் வலிமையானது. பெண் கழுதைப்புலிகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
  • பாம்பை சீண்டினால் அது பதிலடி கொடுக்கும் என்று பலர் கூறுகின்றனர். உண்மையில், இது தவறு. ஆனால் கழுதைப்புலிக்கு பழிவாங்கும் குணம் உண்டு. யாராவது தொந்தரவு செய்தாலோ, எரிச்சலூட்டினால் அல்லது இடையூறு செய்தால் அது அவர்களை குறிவைத்து தாக்கும்.
  • முக்கியமாக கழுதைப்புலிகள் மிகவும் நட்பானவை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நட்பின் உதாரணம் கழுதைப்புலி.
  • மற்ற விலங்குகளை விட கழுதைப்புலிகள் வலுவான தாடைகளைக் கொண்டுள்ளன. எலும்புகள், பற்கள் மற்றும் கொம்புகள் போன்ற அதன் இரையின் கடினமான பகுதிகளை உண்ணும் அளவுக்கு இது வலிமையானது.

இதையும் படிக்கலாம் : மரங்களை பற்றிய அறியதகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *