கற்பக நாதா நமோ நமோ

ஓம் கற்பக நாதா நமோ நமோ
கணபதி தேவா நமோ நமோ
கஜமுக நாதா நமோ நமோ
காத்தருள்வாயே நாமோ

ஓம் கற்பக கணபதியே
பிள்ளையார்பட்டி ஆள்பவரே
ஓம் சதுர்த்தி நாயகனே
ஶ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் வலம்புரி கணபதியே
வளமுடன் வாழ செய்பவனே
ஓம் விக்ன விநாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் ஐங்கர கணபதியே
அருள் வரம் வாரி தருபவனே
ஓம் ஐந்தொழில் நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் கரிமுக கணபதியே
அருகம்புல்லில் வாழ்பவனே
ஓம் கணங்களின் அதிபதியே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் எழில்மிகு கணபதியே
எருக்கம் புல்லில் இருப்பவனே
ஓம் சித்தி விநாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் கய முக கணபதியே
கவலைகள் யாவும் தீர்ப்பவனே
ஓம் முச்சந்தி விநாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் சக்தி கணபதியே
சங்கடம் யாவும் தீர்ப்பவனே
ஓம் சர்வேசன் பாலகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் சர்வ கணபதியே
சந்ததம் பார்த்து அருள் பவனே
ஓம் சுந்தர நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் செல்வ கணபதியே
செல்வ நலன்கள் பொழிபவனே
ஓம் செந்தூர நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் பக்தி கணபதியே
பக்தரை நாளும் காப்பவனே
ஓம் படிக்காசு நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் பால கணபதியே
பாவங்கள் போக்கி வைப்பவனே
ஓம் பரிமள நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் தரும கணபதியே
தருமங்கள் வாழ செய்பவனே
ஓம் திருவருள் நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் துபிஜ கணபதியே
துன்பங்கள் தீர்த்து காப்பவனே
ஓம் தும்பிக்கை நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் துண்டி கணபதியே
துணையாய் வந்து சேர்ப்பவனே
ஓம் தொந்தி விநாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் துர்கா கணபதியே
நற்கதி தந்து அருள் பவனே
ஓம் நற்புத்தி நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் விஜய கணபதியே
வல்வினை தீர்த்துக் காப்பவனே
ஓம் வரசித்தி நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் வீர கணபதியே
வெற்றிகள் யாவும் தருபவனே
ஓம் வக்ரதுண்ட நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் யோக கணபதியே
யோகம் வழங்கும் ஆண்டவனே
ஓம் யாழிசை நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் மகா கணபதியே
மாயங்கள் காட்டி அருள் பவனே
ஓம் மங்கள நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் மும்முர கணபதியே
முக்தியை வணங்கி ஆள்பவனே
ஓம் முத்தமிழ் வித்தகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் லக்ஷ்மி கணபதியே
நிச்சய வாழ்வு தருபவனே
ஓம் அச்சர நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் நர்த்தன கணபதியே
நிம்மதி தந்து காப்பவனே
ஓம் நற்பொருள் நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் சித்திர கணபதியே
சகலமும் தந்து ஆள்பவனே
ஓம் சத்திய நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் சிருஷ்டி கணபதியே
சிந்தையில் நின்று ஆள்பவனே
ஓம் சிவகாமி பாலகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் வல்லப கணபதியே
வரங்களை நாளும் பொலிபவனே
ஓம் வன்னி மர நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் கல்யாண கணபதியே
காரியம் ஆற்றி வைப்பவனே
ஓம் கற்பூர நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் வாரண கணபதியே
வேதனையாவும் தீர்ப்பவனே
ஓம் வில்வமர நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் உச்சிஷ்ட கணபதியே
உள்ளத்தில் நிறைந்தே வாழ்பவனே
ஓம் உலகாளும் நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் உத்தண்ட கணபதியே
சத்தியம் காத்து நிற்பவனே
ஓம் ஓம் கார நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் கைகாட்டி கணபதியே
கற்பனைக்கு எட்டா அற்புதனே
ஓம் கருணையின் நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் சிம்ஹ கணபதியே
சந்ததி தந்து அருள் பவனே
ஓம் சம்ஹார நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் மோகன கணபதியே
மோகத்தை தீர்த்துக் காப்பவனே
ஓம் மூஞ்சூறு வாகனனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் வரத கணபதியே
வருத்தங்கள் போக்கி வைப்பவனே
ஓம் சங்கடஹர நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் பஞ்சமுக கணபதியே
பக்தரை காத்து அருள்பவனே
ஓம் பஞ்சாட்சர நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் நிருத்ய கணபதியே
நாவினில் ஆடி அளிப்பவனே
ஓம் நம்பிக்கை நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் ஸ்வேத கணபதியே
சுகங்களை வாரி தருபவனே
ஓம் வலஞ்சுழி நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் கஜானன கணபதியே
காரிய சித்தி அருள் பவனே
ஓம் கஜமுக நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் கைலாச கணபதியே
குபலயம் காக்கும் பெரியவனே
ஓம் கண் கண்ட நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் புலிப்பாத கணபதியே
புண்ணியம் யாவும் தருபவனே
ஓம் பூலோக நாயகனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் மருதங்குடி கணபதியே
மனக்குறை தீர்த்து அருள்பவனே
ஓம் மணிமகுடம் தரித்தவனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் எரி காட்டூர் கணபதியே
உறுதுணையாக வருபவனே
ஓம் வடதிசை பார்த்தமர்ந்த
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் கணேசபுரி கணபதியே
கனிவுடன் காத்து அருள் பவனே
ஓம் குடவரை கோவில் கண்ட
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் தென்மருதூர் கணபதியே
தீவினை தீர்த்து மாய்ப்பவனே
ஓம் லிங்கமது ஏந்தியவா
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் வேல முக கணபதியே
வாழ்வினை காத்து அருள் பவனே
ஓம் கொன்றை மலர் சூடியவா
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் அதிசய கணபதியே
அர்ச்சனை ஏற்று அருள்பவனே
ஓம் ஆனந்த தாண்டவனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் கண்திருஷ்டி கணபதியே
சுகமென வாழ செய்பவனே
ஓம் சிவகாசி கணபதியே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் உச்சிமலை கணபதியே
உயிர்களை படைத்து காப்பவனே
ஓம் செட்டிநாடு உடையவனே
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் நவசக்தி கணபதியே
நல்லறம் காத்து அருள் பவனே
ஓம் பிள்ளையார்பட்டி வாழ்
ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா

ஓம் கற்பக நாதா நமோ நமோ
கணபதி தேவா நமோ நமோ
கஜமுக நாதா நமோ நமோ
காத்தருள்வாயே நாமோ

ஓம் கற்பக நாதா நமோ நமோ
கணபதி தேவா நமோ நமோ
கஜமுக நாதா நமோ நமோ
காத்தருள்வாயே நாமோ

ஓம் கற்பக நாதா நமோ நமோ
கணபதி தேவா நமோ நமோ
கஜமுக நாதா நமோ நமோ
காத்தருள்வாயே நாமோ

இதையும் படிக்கலாம் : விநாயகருக்கு உகந்த விரதங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *