வாய் துர்நாற்றத்தை போக்கும் அதிமதுரம்..!

வாய் துர்நாற்றப் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுகிறார்கள். வாய் துர்நாற்ற பிரச்சனையை சரிசெய்யும் ஒரு அற்புதமான பொருள் தான் அதிமதுரம். ஆயுர்வேத மருத்துவத்தில் அதிமதுரம் பல பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிமதுரத்தில் ஆன்டி-மைப்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் போன்றவை அதிகமாக உள்ளன. இவை வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகிறது.

அதிமதுரம் பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதோடு ஈறு நோய்களின் தீவிரத்தைக் குறைக்கும், பல் சொத்தையை உண்டாக்கும் கிருமிகளை அழித்து பற்களை சொத்தையாவதைக் குறைக்கும் மற்றும் வாய் நன்கு புத்துணர்ச்சியுடன் துர்நாற்றமின்றி வைத்துக் கொள்ளும்.

அதிமதுரம் பயன்படுத்தும் முறை

அதிமதுர பொடியை நீர் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சிறிது நறுமணத்திற்கு புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, அதைக் கொண்டு காலை மற்றும் இரவு தூங்கும் முன் பற்களைத் துலக்க வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், வாய் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.

அதிமதுர பொடியை நீரில் கலந்து அந்த நீரை கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். அதுவும் அந்நீரை 30 நொடிகள் வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து, பின் துப்ப வேண்டும். இதனால் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் 1-2 டீஸ்பூன் அதிமதுர பொடியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இதை அடிக்கடி குடித்து வந்தால், வாய் துர்நாற்றம் மட்டுமின்றி, ஈறுகளில் உள்ள பிரச்சனைகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாம் : நாக்கை கடிச்சிட்டீங்களா? இதை ட்ரை பண்ணுங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *