நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம்

நரசிம்ம பிரபத்தி ஸ்லோகத்தை 3 முறை ஜபித்தாலே தீராத கடன்கள், கவலைகள் நீங்கும்!

நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம்

மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா

ப்ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா

வித்யா நரசிம்ஹா, த்ரவிணம் நரசிம்ஹா

ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா

இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா,

யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹா,

நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்

தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்யே

நரசிம்ம பிரபத்தி மந்திரம் தமிழ்

நரசிம்மரே தாய்: நரசிம்மரே தந்தை:

சகோதரனும் நரசிம்மரே: தோழனும் நரசிம்மரே:

அறிவும் நரசிம்மரே: செல்வமும் நரசிம்மரே:

எஜமானனும் நரசிம்மரே: எல்லாமும் நரசிம்மரே:

இவ்வுலகத்தில் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே:

எங்கெங்கு செல்கிறாயோ! அங்கெல்லாம் நரசிம்மரே:

உம்மை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை!!

நரசிம்மரே! உம்மைச் சரணடைகின்றேன்.

நரசிம்ம பிரபத்தி மந்திரம் பலன்

இந்த மந்திரத்தை ஜபிப்பதால் தீராத கடன் பிரச்சனை தீரும். குழந்தை இல்லாதவர்கள் தம்பதியராக வந்து வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையின்றி தவிப்பவர்களுக்கும், இருக்கும் வேலைகளில் எதிரிகளை முறியடிப்பவர்களுக்கும், தடைகள் நீங்கியவர்களுக்கும் இந்த வழிபாட்டால் நல்ல வேலை கிடைக்கும்.

கடினமான மற்றும் சிக்கலான நோய்களால் அவதிப்படுபவர்கள் இந்த மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து 48 முறை ஜபித்து நரசிம்மரை வழிபட்டால் குணமாகும். தமிழில் சமஸ்கிருத மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்கலாம் : கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *