பஞ்ச சபை என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்கள் ஆகும். இறைவன் தன் ஆனந்தத் தாண்டவத்தின் மூலம் ஐந்தொழில்களைப் புரிகிறான் என்கின்றன சாஸ்திரங்கள். படைத்தல் – காளிகாதாண்டவம், காத்தல் – கவுரிதாண்டவம், அழித்தல் – சங்கார தாண்டவம், மறைத்தல் – திரிபுர தாண்டவம், அருளல் – ஊர்த்துவ தாண்டவம் ஆகிய ஐந்தொழில்களையும் ஐந்து நடனத்தின் மூலம் நிகழ்த்துவதாக ஐதிகம்.
Contents
பஞ்ச சபை ஸ்தலங்கள்
1 | இரத்தின சபை | ஊர்த்தவ தாண்டவம் ( அருளல் ) | திருவாலங்காடு |
2 | பொற் சபை | ஆனந்த தாண்டவம் ( ஐந்தொழில் ) | சிதம்பரம் |
3 | வெள்ளி சபை | சந்தியாதாண்டவம் ( காத்தல் ) | மதுரை |
4 | தாமிர சபை | முனி தாண்டவம் ( படைத்தல் ) | திருநெல்வேலி |
5 | சித்திர சபை | திரிபுரத்தாண்டவம் ( மறைத்தல் ) | திருக்குற்றாலம் |