சகல ஐஸ்வர்யம் பெற இந்த பொருளாள் அபிஷேகம்

சிவபெருமானுக்கு வாசனை திரவியம் கலந்த நல்லெண்ணையில் நூறு குடம் அபிஷேகம் செய்தால் நோய்கள் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் 10 குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி மாசு மருவற்ற தேகத்தினைப் பெறலாம்.

சுத்தமான பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், குயிலினும் இனிய குரலும், இனிய கானம் பாடும் திறமையும் கிடைக்கும்.

ஆயிரம் எலுமிச்சம்பழம் கொண்டு அபிஷேகம் செய்தால் அறியாமை நீங்கும்.

நூறு மூட்டை சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் வாழ்க்கையில் பற்றாக்குறையை நீக்கி மனநிறைவைத் தருகிறது.

ஆயிரம் குடம் இளநீர் அபிஷேகம் செய்தால் ஆனந்தம் பெற்று கைலாசவாசனின் பாதத்தில் வாழ்வீர்கள்.

பத்தாயிரம் பழங்களால் ஆன பஞ்சாமிர்தத்தை அபிஷேகம் செய்தால், வாழ்க்கையில் தைரியமாக எதையும் சாதிக்கும் வலிமை பெறுவீர்கள். எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள்.

நூறு குடம் தயிர் அபிஷேகம் செய்தால் அதிக செல்வம் கிடைக்கும்.

நூறு குடம் கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் உடல் ஆரோக்கியமும் பலமும் பெறும்.

மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமானவர்.

திராட்சை சாறு செல்வத்தைத் தரும்

பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் உலக துன்பங்களிலிருந்து நம்மை விடுவித்து சொர்க்க நிலையைத் தரும்.

அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் நம்மை எந்தக் கடனிலிருந்தும் விடுவிக்கும்.

அன்னாபிஷேகம், பதினோரு மூட்டை அரிசியுடன் அன்னம் சமைத்து, லிங்க வடிவில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால், வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் பறந்தோடும்.

தூய்மையான மங்களகரமான கங்கை நீரால் நூறு குடம் அபிஷேகம் செய்தால், மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கி, உங்கள் பயங்கள் நீங்கி, உள்ள அமைதி கிடைக்கும்.

சந்தனத்தை பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் குறைவற்ற பக்தியை உண்டாக்கி, அறியாமையை நீக்கும்.

ருத்ரம் உச்சரித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திர சித்தி உண்டாகும்.

ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதி மூலம் அபிஷேகம் செய்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்கம் செல்வீர்கள்.

இதையும் படிக்கலாம் : சிவ 14 தாண்டவம் ஸ்தலங்களும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *