திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல நேரம்

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல சிறந்த நேரத்தை அருணாச்சரேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே பவுர்ணமி புதன்கிழமை 22 ஆம் தேதி இரவு 7.16 மணிக்கு தொடங்கி வியாழன் 23 ஆம் தேதி இரவு 7.51 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம்.

சமீபகாலமாக, பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. மேலும், கோடை விடுமுறை என்பதால், பௌர்ணமி அன்று வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வழக்கம் போல் பௌர்ணமி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம் : எத்தனை பிறைகள் பார்த்தால் என்ன பலன்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *