வீடு கட்ட தேவையான சில வாஸ்து குறிப்புகள்

வீடு கட்ட தேவையான சில வாஸ்து குறிப்புகள்

வீடு கட்ட சில வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும். அனைத்து வாஸ்து கூறுகளையும் சமநிலைப்படுத்த சரியான வடிவம், திட்டம், வடிவம் மற்றும் திசைகளை வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. இது வீட்டை ஒரு வீடாக மாற்றும் மேலும் அமைதி மற்றும் செழிப்பு போன்றவை நிறைந்திருக்கும்.

பூஜை முறை

வீடு கட்டும் போது தடை ஏற்படாமல் இருக்க வீடு கட்ட வாங்கிய கட்டுமான கற்களில் சிறிய ஜல்லிகல் ஒன்றை எடுத்து கொண்டு ஐய்யப்பன் கோவிலுக்கு சென்று பூசாரியிடம் கொடுத்தால் ஐய்யப்பன் பாதத்தில் வைத்து ரிக் வேதத்தின் சுருக்கத்தை ஓதி பூஜை செய்து கொடுப்பார்கள்.

அந்த ஜல்லிகல்லை அஸ்திவாரத்தின் ஈசானிய மூலையில் போட்டு மூடி கட்டிடம் கட்டினால் எவ்வித பிரச்சனைகளும் இன்றியும் தீய சக்திகளின் தாக்குதல் இன்றியும் வீடு கட்டும் பனி நன்றாக தொடங்கி முழுமையாக நிறைவேறும்.

இம்முறை ஐய்யப்பன் கோவிலில் இன்றும் நடை முறையில் உள்ளது. சரியான தேவஸ்தான நபரின் உதவியுடன் கட்டணம் செலுத்தி பூஜை செய்வதால் நல்ல முறையில் வீடு கட்டலாம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க : வீடு கட்ட உகந்த மாதங்கள்

வாஸ்து படி செய்யக்கூடியவை

வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும்.

ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும். பிறகு தான் வடக்கு அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு காட்டினாள் சிறப்பு.

வீட்டிற்கு தெற்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும்.

வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.

வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.

அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.

தென் மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் நீர் உபயோகத் தொட்டி அமைய வேண்டும்.

கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய வேண்டும். செப்டிக் டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும்.

மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைய வேண்டும்.

மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.

ஓரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருப்பது நல்லது.

வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலிமனை, நிலங்களை வாங்கலாம்.

மேலும் படிக்க : எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த திசை நோக்கிய வீட்டில் இருப்பது நல்லது

வாஸ்து படி செய்யக்கூடாது

வீட்டின் தென்மேற்கு மூலையின் மெயின்கேட், போர்டிகோ தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் வேதனைகளும் சோதனைகளுமே வரும்.

வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.

வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின் மேல் பூந்தொட்டி வைக்கக் கூடாது.

வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை, நிலங்களை இனாமாகக் கூட வாங்கி சேர்க்கக் கூடாது.

மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.

வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை வளைவாக இருக்க கூடாது.

ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது. ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது. ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது. ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.

வீடு பழுது பார்க்கும் பணிகளை மெதுவாகச் செய்தாலும் பரவாயில்லை. பாதியில் நிறுத்தவேக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *