சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்

suka presavam tips

சுகப்பிரசவம் என்பது இந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு வரம் என்றே சொல்லலாம். இது ஆரோக்கியமான குழந்தை பெறுவதற்கு மட்டுமல்ல, தாய் குறைந்தபட்ச சிக்கல்களுடன் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பவும் வழி செய்கிறது.

சிசேரியன் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் வலி இல்லாமல் இருக்கும். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு காலம் முழுவதும் அந்த பெண்ணிற்கு வலியும் வேதனையும் மட்டும் தான் மீதி இருக்கும் காரணம் சிசேரியன் செய்யும் பெண்களுக்கு அதிகம் முதுகுவலி எதையும் செய்ய முடியாத அளவிற்கு உடலின் உபாதைகள் ஏற்படும்.

ஆரோக்கியமான உடல்வலிமையோடு, மனவலிமையும் கை கூடினால் சுகப்பிரசவம் எளிதான ஒன்று.

பெண்கள் எல்லோருக்கும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே கர்ப்பிணி பெண்கள் சுக பிரசவத்தின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

சரியான சத்துக்கள்

  • இரும்புச் சத்து
  • கால்சியம்
  • புரதம்
  • நார்ச் சத்து
  • மக்னீசியம்
  • மங்கனீஸ்
  • ஜின்க்
  • வைட்டமின் ஏ, சி, பி12

உடல்எடை

பிரசவத்தில் சிக்கலை உண்டாக்குவதில் உடல் பருமனுக்கும் பங்கு உண்டு. சுகப்பிரசவத்திற்கு தாயின் உடல் எடையும் வயிற்றில் உள்ள குழந்தையின் எடையும் குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பது அவசியம். எனவே கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் குறிப்பிட்ட இடைவெளியில் உடல் எடையைப் பரிசோதித்து கொள்வதோடு ஆரோக்கியமான உணவையும் எடுத்துகொள்ள வேண்டும்.

தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பிரசவத்தின் போது அதிக எடையில் சிசு வளர்ந்திருந்தால், பிரசவ பாதையில் வெளிவருவதில் அதிக சிரமம் உண்டாகும்.

தண்ணீர்

கர்ப்ப காலத்தில் தண்ணீர் அதிகம் அருந்துவது  தாய்க்கும் குழந்தைக்கும் ஆரோக்கியம் தரும். ஆனால் கர்ப்ப காலத்தில் குழந்தைக்கும் அந்த தண்ணீர் தேவைப்புடும். ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி நாக்கு வறண்டு அதிக தண்ணீர் தேவைப்படும். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாமல் தண்ணீர் குடத்தில் நீர் வற்றாமல் இருக்க உதவும்.

போதுமான இரத்தம்

பெரும்பாலான பெண்களுக்கு உடலில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவும் கணிசமாக குறைந்தே காணப்படுகிறது. காரணம் இன்றைய இளம்பெண்கள் உடலை கச்சிதமாக வைத்திருக்கிறேன் என்று உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்வதில்லை.

பொதுவாக இரத்தம் குறைந்திருக்கும் பெண்கள் கருவுற்ற காலத்தில் இரத்த உற்பத்தி செய்யும் உணவுகளை மருத்துவரின் ஆலோசனை பெயரில் எடுத்து கொள்ளவேண்டும். உரிய உணவை எடுத்து கொள்ளாத போது பிரசவக்காலத்தில் சிக்கலை மட்டுமே உண்டு செய்யும்.

இதையும் படிக்கலாம் : கர்ப்பிணிகளுக்கு அவசியம் தேவைப்படும் ஊட்டச்சத்து உணவுகள்

உடற்பயிற்சி

கர்ப்ப காலத்தில் செய்யப்படும் எளிய உடற்பயிற்சிகள் தொடை மற்றும் இடுப்பு தசைகளை வலுவாக்குகின்றன.மேலும் பிறப்புறுப்பையும் இளக்கமாக்கி சுகபிரசவம் எளிதாக  நடைபெற உதவுகின்றது. அதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செய்து வாருங்கள். உடலை உழைத்து செய்யக்கூடிய வீட்டு வேலைகளும் பிரசவக் காலத்தை எளிதாக்கும்.

நடைப்பயிற்சி

கர்ப்ப காலத்தின் ஆரம்பகாலத்தில் நடைப்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் ஆறு அல்லது ஏழாவது மாத கர்ப்ப காலத்தில் இருந்து காலையில் ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும் நடைப்பயிற்சி செய்தாள் குழந்தை தலைகீழாக கர்ப்பவாய் நோக்கி நகரத் தொடங்கி சுகப்பிரசவம் ஆவதற்காக இடுப்பு எலும்புகள் தானாக தயாராகி ஒரு எளிமையாக சுகப்பிரசவம் ஆக மிகவும் உதவியாக இருக்கும்.

நடைபயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் வீட்டுப் படிக்கட்டுகளில் 15 நிமிடங்கள் வரை ஏறி இறங்கலாம். கர்ப்ப காலத்தின் இறுதி காலத்தில் அதாவது பத்தாவது மாதத்தில் நடை பயிற்சி செய்யும் பொழுது அருகில் ஒரு துணையோடு மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில் சாப்பிட்டு முடித்ததும் அரை மணி நேரம் மிதமான நடைபயிற்சி செய்யும் போது உடலின் ஆரோக்கியம் ஆகும். மேலும் ஆழ்ந்த தூக்கமும் உண்டாகும்.

வெந்நீர் குளியல்

பிரசவகாலம் நெருங்கும் பொழுது வெது வெதுப்பான தண்ணீரால் இளஞ்சூடான நீரில் குளியுங்கள் .இல்லையெனில் சூடான தண்ணீரை ஒரு தொட்டியில் நிரப்பி, அதனுள் எவ்வுளவு நேரம் செலவளிக்க இயலுமோ, அவ்வுளவு நேரம் செலவிடுங்கள். வெந்நீரில் குளித்துவிட்டு படுத்தால் மன அழுத்தமும், உடல் சோர்வும் நீங்கும்.

மூச்சுப் பயிற்சி

சுகப்பிரசவத்தினை யோகா பயிற்சி மற்றும் சுவாச பயிற்சியின் மூலம் எளிதாக மேற்கொள்ளலாம். முக்கியமாக பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி, மனதை சாந்தப்படுத்துவதற்கு உதவும். மேலும், உடல் திசுக்களுக்குத் தேவையான பிராணவாயுவையும் தடையின்றி சேர்க்கும்.

மன அமைதி

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நாள் நெருங்க நெருங்க மனதில் ஒரு பயம் இருந்தே இருக்கும். இதனால் பெண்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகலாம். இந்த மனஅழுத்தம் தான் பிரசவத்திற்கு முதல் எதிரி. ஆனால் பிரசவம் எனக்கு எளிதில் நிகழும் என்ற எண்ணத்தை மட்டுமே மனதில் வைத்து கொண்டு எப்போதும் மகிழ்வாக இருப்பது நல்லது.

கர்ப்பகாலத்தில் மன அமைதியும் மகிழ்ச்சியும் இருந்தாலே வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். இதுவும் சுகப்பிரசவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முக்கிய குறிப்பு

திரும்பி படுக்க நினைத்தால், அப்படியே திரும்பி படுக்காதீர்கள், எழுந்து உட்கார்ந்து, மறுபக்கம் திரும்பி, பின் படுங்கள். இதை செய்வதற்கு மிகவும் கடினமாகத் தானிருக்கும், ஆனால் சுகப்பிரசவத்திற்கு இது மிக மிக மிக முக்கியம்.

உடலுக்கு உஷ்ணம் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடாதீர்கள், மிகுந்த குளிர்ச்சியான உணவுப்பொருட்களையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தினமும் குளிப்பற்கு 1/2 மணி நேரம் முன்பு தேங்காய் எண்ணெயையோ, நல்லெண்ணயையோ வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் நன்கு தடவி, ஊற விட்டு, பின் குளிக்கவும்.

சுக பிரசவமாவதற்காகவும், இடுப்பு எலும்பு வலுவாக இருப்பதற்காகவும் உளுத்தம் பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். உளுந்து வடை, உளுத்தங்களி, உளுத்தங்கஞ்சி போன்றவைகளை செய்து சாப்பிடுங்கள்.

இந்த நேரத்தில் செக்ஸ்ஸில் நாட்டமிருந்தாலும் தாராளமாக ஈடுபடலாம் குழந்தைக்கு ஒன்றுமாகாது. மருத்துவர் வேறு ஏதாவது காரணங்களுக்காக உங்களிடன் பிரித்தியேகமாக வேண்டாம் என்று கூறினாலொழிய நீங்களாக குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயந்து அதை நிறுத்த வேண்டாம். சுகப் பிரசவத்துக்கு இது சிறந்தது.

ஒரு பெண்ணிற்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் என்பது உண்மைதான் அதற்காக பயப்படத் தேவையில்லை எல்லா பெண்களும் வாழ்விழும் இதை கடந்து தான் வருகிறார்கள். தைரியமாக பிரசவத்தை எதிர்நோக்கி மகிழ்ச்சியாக இருங்கள்.

மேலும் படிக்க : கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *